தஞ்சை பெருவுடையாருக்கு பிரமாண்டமான அன்னாபிஷேகம்... அரிசி காய்கறிகள் எத்தனை கிலோ தெரியுமா.?

ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெறும். இந்த விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலிலும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது

அதன்படி, இக்கோயிலில் சனிக்கிழமை (அக்டோபர் 28) பிற்பகல் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் ஆயிரம் கிலோ அரிசியும், 750 கிலோ காய்கறிகளும், 150 கிலோ பழங்களும் அளித்தனர்

பின்னர், பிற்பகலில் தயாரிக்கப்பட்ட அன்னம் கொண்டு 13 அடி உயரமுடைய பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது

Stories

More

உதகை சாலைகளில் கொப்பளிக்கும் கழிவு நீர்..

அஷோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் போட்டோ ஷூட் நடத்திய சூப்பர் ஸ்பாட் இது தான்..

ராகு கேது தோஷங்கள் நீங்க இவரை வழிபட்டால் போதும்!

இதையடுத்து, பெருவுடையாருக்கு அன்னம் சாத்தப்பட்டு, வெண்டைக்காய், புடலங்காய், கேரட், கத்திரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, பரங்கிக்காய், உருளைக்கிழங்கு, பீட்ருட், 

அவரைக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிபழம், வாழைப்பழம், தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்களாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.மாலையில், அலங்காரம் கலைக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது

அன்னாபிஷேக விழா வழக்கமாக மாலையில் நடைபெறும். ஆனால், சனிக்கிழமை இரவு சந்திரகிரகணம் நிகழ்ந்ததால், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னாபிஷேகம்,

அலங்காரம், பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, சந்திரகிரகணத்தையொட்டி இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெற்றது

பெரிய கோயிலில் மேலும் ஒரு பிரமாண்டம்..! நாட்டியம் ஆடிய 1038 கலைஞர்கள்.!