பெரிய கோயில் சிலைகளின் உண்மையான சிறப்புகள் இதுதான்.!

கேரள நாட்டில் திருவனந்தபுரம் அருகேயுள்ள கடற்கரைப்பட்டினமான காந்தளூர்ச்சாலையில் ராஜ ராஜ சோழன் அனுப்பிய தூதுவனைபாஸ்கர ரவி வர்மன் சிறையில் அடைத்ததால் கடும் கோபமான ராஜ ராஜ சோழன்

கேரளந்தகன் நுழைவு வாயில் பெயர் காரணம்

மகன் ராஜேந்திர சோழனை அனுப்பினார். அப்போது கடும் போரிட்டுச் சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனை வெற்றி வாகை சூடிய ராஜேந்திர சோழன் தூதுவனையும் மீட்டார்

தூதுவர்களை கைது செய்வது தவறு என்று தெரிந்தும் அப்படி செய்ததால் அவர் நாட்டிலேயேபாஸ்கர ரவிவர்மனை சிறையில் அடைத்தார் ராஜேந்திர சோழன். இதன் நினைவாகவே,தஞ்சை பெரியகோயிலின் நுழைவிடத்தில் முதலாவதாக உள்ள கோபுரத்துக்கு கேரளந்தகன் திருவாயில் எனப் பெயரிடப்பட்டது

பெரிய கோவிலில் வட புறத்தில் உள்ள விமானத்தின் ஒரு பகுதியில் சிவன் கையில் கத்தி வைத்திருப்பது போன்ற சிலை அமைந்திருக்கும் அதற்கு மேலே சிவன் வில் அம்பு வைத்திருப்பது போன்ற சிலை அமைந்திருக்கும் அதற்கு மேலே ஆசீர்வாதம் செய்வது போன்று சிலையும் அமர்ந்திருக்கும்

பெரிய கோயிலில் வெளிநாட்டவரின் சிலை

அதற்கு மேல் ஒரு அடி பக்கத்தில் தொப்பி போட்ட ஒருவரின் உருவ சிலை இருக்கும் அவர் மார்க்கோ போலோ ஜப்பானிய வணிகர் சோழர்கள் ஐரோப்பிய வணிகர்களுடன்தொழில் சம்பந்தமான நெருங்கிய நட்பு வைத்திருந்தார்கள்

14- வது நூற்றாண்டு தான் இந்தியாவிற்கு வந்தார் இந்த வெளிநாட்டவர் ஆனால் கோயில் கட்டி முடிக்கப்பட்டது 11-ஆம் நூற்றாண்டு அதன் பின்னர்அவர்நினைவாகவும் வரவேற்கும் விதமாகவும் இவருடைய உருவம் விமானத்தில் இடம்பெற்றுள்ளது

13ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பார்வதி தேவிக்காக பெரிய கோயிலின் வட திசையில் ஒரு சன்னதியை கட்டி உள்ளனர். நாயக்கர்களை பொறுத்தவரையில் தூண்களை மிக அற்புதமாக செய்வார்கள்மதுரை, சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராமேஸ்வரம் இங்கெல்லாம் ஆயிரங்கால் மண்டபம் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது

பெரிய கோயிலில் பாண்டியர்கள் கட்டிய சன்னதியா

இவை அற்புதமான தூண்களால் நிறைந்திருக்கும் இது அவர்களுடைய சிறப்பு. சோழர்களுடைய தூண்களும் அழகாகவும் வித்யாசமாகவும் இருக்கும் அதே போல தான் பாண்டியர்களும் சதுரமாகவும் தட்டு வடிவிலும் பல கலைநுணுக்கங்களுடன் உடைய தூண்கள், பெரிய கோயிலில் கட்டிய சன்னதியின் வெளிப்புற சுவரில் அமைந்துள்ளது

Stories

More

உதகை சாலைகளில் கொப்பளிக்கும் கழிவு நீர்..

அஷோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் போட்டோ ஷூட் நடத்திய சூப்பர் ஸ்பாட் இது தான்..

ராகு கேது தோஷங்கள் நீங்க இவரை வழிபட்டால் போதும்!

கோயில் பின்புறம் கிழக்கு பகுதியில் உள்ள மராட்டிய மன்னர்கள் கட்டிய ஒருமண்டபம் அமைந்துள்ளது. இது பிரார்த்தனை கூடமாக செயல்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தின் முன்புறத்தில் இசை நாட்டிய கலைஞர்கள் நடனம் ஆடுவது போல கற்சிலைகள் செதுக்கப்பட்டிருக்கும்

இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் சிலைகள்

இது பார்ப்பதற்கு மிக அழகாகவும் இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் அழகையும் இசையின் அழகையும் எடுத்துரைப்பது போல அமைந்திருக்கும். இதே மண்டபத்தில் பதஞ்சலி ரிஷிகாவும் வியாக்கரபாதருக்காகவும் சிதம்பரத்தில் நடராஜர் நடனமாடிய காட்சியை அப்படியே காட்சிப்படுத்தும் விதமாக இந்த மண்டபத்தின் நுழைவு வாயிலில் சிலை உள்ளது

கிழக்கு பகுதியில் கோயிலின் பக்கவாட்டில் சிவன் நடுவிலும் இடது வலது புறத்தில் ஒரு ஆணும், பெண்ணும் இருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில் ஆண் சிலை கம்பீரமாகவும் பெண் சிலை நலின பாணியில் அழகாக காட்சியளிக்கும். இதற்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். இந்த தத்துவத்தைசீனர்கள் இனியன் என்று கூறுவார்கள்

அதேபோல் சிவன் ஒரு கையில் கங்கையை வைத்திருப்பார் இதற்கு கங்காதரர் என்று பெயர் ஆடை அணிகலன்கள் அணிந்து இன்முகத்துடன் அழகாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கும். இச் சிலையானது சிவனின் அழகிய தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது

பெரிய கோயிலில் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தியது ராஜராஜ சோழன் தான். இக்கோயிலில் 400-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டு தமிழில் எழுதி இருக்கும், இக்கல்வெட்டில் முதலில் ஸ்வஸ்திஸ்ரீ என்று தொடங்கும் புள்ளி வைத்த எழுத்துக்களும், நெடில் எழுத்துக்களும் இருக்காது இதை புரிந்து கொண்டாலே ஓரளவுக்கு படிப்பது புரியும்

ராஜ ராஜன் சோழன் மெய்க்கீர்த்தி

முக்கியமாக மாமன்னன் ராஜராஜ சோழன் என்ற அவருடைய பெயர் இருக்காது அதற்கு பதில் அவருடைய மெய் கீர்த்தி இருக்கும் மெய் கீர்த்தி என்னவென்றால் ராஜ ராஜனின் புகழை உணர்த்துபவை. இக் கோயிலில் உள்ள பல கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கும் மெய்க்கீர்த்தி என்னவென்றால்

திருமகள் போல பெரு நிலச்‌ செல்வியும், தமக்கே உரிமை பூண்டமை மனம் கொளத்தக்க காந்தலூர் சாலை களமருதருளிய வேங்கை நாடும் தடிகை பாடியும் நுலம்ப பாடியும் மலை நாடும்‌. இதில் தன்னுடைய வெற்றிகளை குறிப்பிட்டுள்ளார் ராஜ ராஜ சோழன்

கேரளாந்தகன் கோபுரத்தின் முன் பக்கத்தில் ஒரு அற்புதமான சிலை இருக்கும். அதில் வலது புறத்தில் சிவன் ஒற்றை காலை மேலே தூக்கி வைத்துள்ளது போன்ற ஒரு சிலையும், இடது புறத்தில் பார்வதியும் சிவனும் ஒன்றாக அமர்ந்த காட்சியும் இருக்கும் அதன் அருகிலேயே பார்வதி இன்முகத்தோடு நடனமாடுவது போன்ற சிலையும் இருக்கும்

ஒரு முறை கைலாயத்தில் சிவன், பார்வதிக்கு நடன போட்டி நடக்கும் போது சிவனின் காதில் போட்டுள்ள குண்டலம் கீழே விழுந்து விடும் அப்போது நடனமாடிக் கொண்டே ஒற்றை காலினால் குண்டலத்தை எடுத்து காதில் அணிந்து கொள்வார். அதற்காக செதுக்கப்பட்டுள்ள சிலை தான் என்று கூறப்படுகிறது

தஞ்சை பெருவுடையாருக்கு பிரமாண்டமான அன்னாபிஷேகம்… அரிசி காய்கறிகள் எத்தனை கிலோ தெரியுமா.?