மூன்றாவது முறையாக செந்நிறமாக மாறிய புதுவை கடல்.!

புதுச்சேரி கடல்பகுதி கடந்த இரண்டு தினங்களாக அலை சீற்றத்துடனும் கடல் கொந்தளிப்புடனும் காணப்பட்டது

இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடல் பகுதி காலை முதலே சிகப்பு நிறமாக காட்சியளிக்கிறது

தலைமை செயலகம் முதல் குருசுகுப்பம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் அளவிற்கு கடல் பகுதி செந்நிறமாகவே காட்சியளித்தது

இந்த செய்தி புதுச்சேரி முழுவதும் வேகமாக பரவவே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்

அவர்கள் கடலில் சிகப்பாக உள்ள பகுதிகளை வீடியோவாக பதிவு செய்தும் கடல் முன்பு நின்று செல்பி எடுத்தும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்

Stories

More

கம்மி விலையில் ஸ்வெட்டர் வேணுமா..? விழுப்புரம் இந்த பகுதிக்கு போங்க...!

முத்தத்தில் உருவான கமல் ஓவியம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல இதுதான் நல்ல டைம்..

இந்நிலையில், கடலில் இறங்கி நிற்கவோ குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் பொது மக்களை கண்காணிக்க போலீசாரும் கடற்கரையில் போடப்பட்டுள்ளனர்

புதுச்சேரியில் திடீரென்று கடல் பகுதி மூன்றாவது முறையாக செந்நிறமாக மாறி காட்சியளிக்கும் சம்பவம் புதுச்சேரி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொசுக்களை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும் 6 செடிகள்.!