சஷ்டி விரதத்தால் இவ்வளவு நன்மைகளா.!

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அதோடு மட்டுமல்லாமல் தங்களால் முடிந்த பால் பழங்கள் பூஜை பொருட்களை கோயிலில் வழங்கினர்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மேலவாசல் முருகன் கோயில் உள்ளது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வள்ளி சுப்பிரமணியர் தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டிருந்தது

கந்த சஷ்டி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் பயன்கள் என்ன என்பது குறித்து தீவிர முருக பக்தர்கள் கூறுகையில், கந்த சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் தீராத நோய்கள் தீரும்

திருமண பாக்கியம் கைகூடி வரும், புத்திர பாக்கியம் கிடைக்கும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை

எனவே முருகப்பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டியில் விரதமிருந்து வழிபடுகின்றோம். கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகின்றது

Stories

More

கிறிஸ்துமஸ், சபரிமலை சீசனை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

மழைக்காலங்களில் பைக்கை பராமரிப்பது எப்படி தெரியுமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

முருகப் பெருமான், சூரபத்மனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொண்டார். முருகன் தெய்வானை திருக்கல்யாணத்திற்கு பிறகே விரதம் நிறைவு செய்யப்படுகிறது

குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்பது கிடையாது சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானை வணங்கினால் என்ன நினைத்து வேண்டிக் கொள்கிறோமோ அந்த காரியம் நிச்சயம் நடக்கும்

நாம் நினைக்காத பல நல்ல காரியங்களும், மாற்றங்களும், ஏற்றங்களும் நம்முடைய வாழ்வில் நிகழும் என்பது உண்மை” என தெரிவித்தனர்

கல்லறையில் தீபாவளி கொண்டாடும் கிராமம்.. காரணம் தெரியுமா.?