உத்திராக்கண்டில் உள்ள ஒரு அழகிய மலை கிராமத்திற்கு சென்று வந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி. காரணம் என்ன தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி தோனி உத்திராக்கண்டில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்றார்.
இவர்களை கண்டதும் கிராமத்தினர் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தோனி தனது குல தெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
உத்தரகாண்டின் அழகிய பள்ளத்தாக்குகளையும் கண்டு களித்தார்.
பின்னர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று அங்கிருந்து புறப்பட்டார்.
இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு தான் தன் சொந்த கிராமத்திற்கு அவர் சென்றுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் தந்தை பான் சிங் தோனி சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு இவர்கள் ராஞ்சியில் குடியேறினார்.