பல்வேறு வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஜல்லிக்கட்டு மைதானம்.!

ஜல்லிக்கட்டுக்கு பேர் போனது மதுரை ஜல்லிக்கட்டு தான் என்று நாம் அனைவரும் அறிந்ததே. மேலும், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற பகுதிகளில் மூன்று நாட்கள் நடைபெறும்

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டவர் மற்றும் மதுரையை சுற்றியுள்ள மக்கள் என 5000 மேற்பட்டவர்கள் வாடிவாசலில் கூடுவார்கள்

ஆனா ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் சுற்றி உள்ள பகுதிகள் எல்லாம் ரொம்பவே குருக்களான பகுதியாக இருப்பதினால் அனைவராலுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது

இதனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கு மைதான அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்

அதற்க்கு ஏற்ற மாதிரி அலங்காநல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய கீழக்கரை என்ற கிராமத்தின் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூபாய் 44 கோடி மதிப்பீட்டில்  பிரம்மாண்டமான 4500 பேர் பார்க்கக்கூடிய வகையில் மைதானம் கட்டப்பட்டு வருகிறது

மூன்று தலமாக கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தின் தரை தளத்தில், வாடிவாசல் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பரிசோதனை அறை, பத்திரிக்கையாளர் அறை, காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், மாடுபிடி வீரர்கள் உடைமாற்றும் அறை,

தற்காலிக விற்பனை கூடம், பொருட்கள்  பாதுகாப்பு பெட்டகம், தங்கும் அறை, போன்றவையும் முதல் தளத்தில் முக்கிய பிரமுகர்களின் அறை, உணவு வைக்கும் அறையும் அதேபோல் இரண்டாவது தளத்தில் பொருட்கள் வைப்பறை என்ற பல்வேறு வசதிகளை கொண்டு கட்டப்பட்டு வருகின்றது

Stories

More

மழைக்காலங்களில் பைக்கை பராமரிப்பது எப்படி தெரியுமா..

மாலை வேளையில் மனதை லேசாக்கும் திருச்சி மாநகராட்சி பூங்கா..

நிரம்பி வழியும் தேனி சண்முக நதி அணை...!

இதேபோல் இதர வசதிகள் ஆன மழை நீர் வடிக்கால் வசதி, செயற்கை நீரூற்று மற்றும் புல் தரை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, காளைகள் ஓய்வெடுக்கும் அறை, கால்நடை மருந்தகம்,

ஆண் மற்றும் பெண் ஓய்வு அறைகள், மாடுபிடி வீரருக்கான மருத்துவ பரிசோதனை அறைகள் என்று பல்வேறு வகையான இதர வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது

இவ்வாறு முழுக்க முழுக்க பிரம்மாண்டமான முறையில் தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வரக்கூடிய நிலைகள் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி பணிகள் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது

குறிப்பாக 2024 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த மைதானத்தில் தான் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது

ஆபத்தை உணராமல் நீரில் மூழ்கிய தரைப்பாலத்தை கடக்கும் மக்கள்.!