தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்
ஆண்டுதோறும் இங்கு கந்த சஷ்டி திருவிழா ஆறு நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவை நான்காம் திருநாள் மாலை சுப்பிரமணிய சுவாமி கஜமுகாசுரன் வேலாயுதத்தால் வதம் செய்யும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கஜமுகாசுரன் என்பது யானை முகத்தை உடைய அசுரன். கந்த சஷ்டி திருவிழாவின் ஆறாவது திருநாள் அன்று சூரபதுமனை வதம் செய்யும் திருவிழா கோலாகலமாக நடைபெறும்
அதனை ஓட்டி நான்காம் திருநாளன்று யானை முகத்தை உடைய கஜமுகாசுரன் வதம் செய்யும் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்