விழுப்புரத்தில் தயாராகி உள்ள பல வண்ண  அகல் விளக்குகள்.!

இந்த வருடம் புது புது வடிவங்களில் பொது மக்களுக்கு பிடித்தவாறு அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளதாக அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். கார்த்திகை தீப திருநாள் வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது

திருநாளில் பொதுமக்கள் தங்களது வீடு, கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இதற்காக மண்ணால் செய்யப்படும் அகல் விளக்கு தயாரிக்கும் பணி பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது

அந்தவகையில்,விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் கலைமகள் சுடுமண் சிற்ப குழு மற்றும் 6க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணைந்து 120க்கும் மேற்பட்ட பெண்கள் கார்த்திகை தீபத்திற்கு தேவையான அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

பல்வேறு வகையான அகல்விளக்குகள் தயாரிப்பது குறித்து பெண்மணி பரிமாண நம்மிடம் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட பல வகைகளில் கார்த்திகை தீப அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது

5 ஸ்டார், 7 ஸ்டார் அகல்விளக்குகள், ஒன் ஸ்டெப் அகல் விளக்குகள், 2 ஸ்டேப் அகல் விளக்கு, கலசத் டோர், தாமரைப்பூ விளக்குகள் நெய் விளக்கு வீடு டூம் அகல்விளக்கு, ஹாங்கிங் தூம் அகல் விளக்குகள், மாய விளக்குகள், யானை விளக்குகள், 

தட்டு விளக்குகள், தண்ணீர் ஊற்றி எரியும் விளக்குகள், தேங்காய் அகல் விளக்கு, ஸ்டாண்ட் அகல் விளக்கு, சங்கு அகல் விளக்கு, குபேராக விளக்குபோன்ற பல வகைகளில் பல வண்ணங்களில் அகவிளக்குகள் தயாரித்து வருகின்றனர் தொழிலாளர்கள்

Stories

More

நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தையில் உரமாகும் காய்கறி கழிவுகள்!

மழைக்காலங்களில் பைக்கை பராமரிப்பது எப்படி தெரியுமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

ஒரு ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விலை கொண்டு அகல்விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் விழுப்புரம் மாவட்ட உள்ளோர்களிலும் கேரளா பாண்டிச்சேரி சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், வேலூர்,

காஞ்சிபுரம் திருப்பதி போன்ற பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை ஐந்தாயிரத்துக்கும் மேல் பல அகவிளக்குகள் பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்

மலை வாழ் மக்களின் இசை கருவிகள் பாத்துருக்கீங்களா.?