பண கஷ்டம் மன கஷ்டம் நீங்க இந்த கோயிலும் செல்லலாம்.!

குபேரன் வழிபட்ட திருத்தலங்களில் ஒன்றான குபேரபுரீஸ்வரர் தஞ்சபுரீஸ்வரர் என அழைக்கப்படும் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பல சிறப்புகளை உடைய இக்கோயிலின் தல வரலாறு மற்றும் சிறப்புகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் விரிவாக காணலாம் 

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெண்ணாற்றங்கரை என்ற பகுதியில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழன் பெருவுடையார் கோயில் கட்டுவதற்கு முன்பு இந்த கோயில் இருந்ததாக கூறப்படுகிறது

செல்வத்தின் அதிபதியாக விளங்கி வந்த குபேரனிடம் இராவணன் தனது தவ வலிமையால் அவரது செல்வ வலிமையை பறித்துக் கொண்டாறாம். உடனே சிவபெருமானிடம் குபேரன் தஞ்சம் அடைந்துள்ளார். ராவணன் பறித்துக் கொண்ட தனது செல்வங்களை மீட்டுத் தருமாறு குபேரன் சிவபெருமானிடம் வேண்டுதல் வைத்துள்ளார்

அதற்குப் பிறகு சிவபெருமான் ராவணனிடம் இருந்த செல்வங்களை அவனிடம் இருந்து மீட்டு குபேரனுக்கு கொடுத்துள்ளார். இதன் காரணமாக தஞ்சம் என்று வந்த குபேரனை சிவபெருமான் காத்த காரணத்தினால் இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு தஞ்சபுரீஸ்வரர் என பெயர் கொடுக்கப்பட்டது

இதன் காரணமாகவே தஞ்சாவூர் என பெயர் வந்தது எனவும் கூறப்படுகிறது. இழந்த செல்வங்களை குபேரன் ஐப்பசி மாதத்தில் மீட்டெடுத்தார் என்பதற்காக ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று இந்த கோயிலில் மிகப்பெரிய விசேஷ பூஜைகளும், யாகங்களும் நடத்தப்படும்

3 அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்து அமைந்துள்ள இக்கோயிலைபல்லவர்கள் ஆட்சியில் கட்டப்பட்டதாககூறப்படுகிறது. சுற்றிலும் மூலிகை மரங்களால் நிறைந்து காணப்படும் இக்கோயில் பிரகாரம், இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான மன அமைதியை தருகிறது

Stories

More

நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தையில் உரமாகும் காய்கறி கழிவுகள்!

மழைக்காலங்களில் பைக்கை பராமரிப்பது எப்படி தெரியுமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

இறைவன் சுயம்பு லிங்கமாகும். மூலவர் லிங்கத் திருமேனி சற்றே அளவில் பெரியதாகும். இறைவன் சன்னதிக்கு வெளியே துவாரபாலகர்கள் இருக்கின்றனர். வெளி பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கஜலஷ்மி, சரஸ்வதி, பஞ்சமுக ஆஞ்சனேயர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் இருக்கின்றன

இது, குபேரன் வழிபட்ட தலம் என்பதால், பண கஷ்டம், மன கஷ்டம், பணம் தொல்லை, சனி தோஷம் நீங்க இக்கோயிலுக்கு வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர். லஷ்மி குபேர யாகத்தில், பங்கேற்கும் பக்தர்களுக்குப் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது

விழுப்புரத்தில் தயாராகி உள்ள பல வண்ண அகல் விளக்குகள்.!