கோவையில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி.. சீறிப்பாய்ந்த பைக்குகள், கார்கள்.!

தனியார் நிறுவனம் மற்றும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 26-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் நடைபெற்று வருகிறது

தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு அதன் இறுதிப் போட்டிகள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் நடைபெற்று வருகிறது

ஜே.கே டயர் நோவிஸ் கோப்பைக் கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் என பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றது

இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்

இந்த பந்தயத்தின் இறுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வெற்றி பெற்றவர்கள் சர்வதேச அளவிலான பந்தயங்களில் கலந்து கொள்ள உள்ளனர்

Stories

More

நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தையில் உரமாகும் காய்கறி கழிவுகள்!

மழைக்காலங்களில் பைக்கை பராமரிப்பது எப்படி தெரியுமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

இதனிடையே டிராக்கில் பைக் மற்றும் கார்கள் சீறிப்பாய்வதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்

ஊமை நாடகம் மூலம் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்.!