செல்லப்பிராணிகளுக்கு தனியாக ஒரு துணிக்கடை இருக்கா?

மனிதர்கள் திருமணங்களுக்கு ஷாப்பிங் செய்வது போல, வளர்ப்பு நாய்களுக்கும் வட இந்தியாவில் திருமணம் செய்து வைப்பதும்  இவற்றின் திருமணத்திற்கும் ஷாப்பிங் செய்வது தற்போது வழக்கமாகி விட்டது.

மணமக்களுக்கு திருமண ஆடைகள் கிடைப்பது போல் அகமதாபாத்தில்  உள்ள ஒரு கடையில் செல்லப்பிராணிகளுக்கு விதவிதமான ஆடைகள் கிடைக்கின்றன.

இதுபற்றி செல்லப் பிராணிகள் கடை நடத்தி வரும் கியாதி ஷா தெரிவிக்கையில், “மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போலவே நாய்களை கவனித்துக்கொள்கிறார்கள்

நம் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்வது போல, நாயையும் திருமணம் செய்து கொடுப்பார்கள்.

செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் அதனுடன் ட்வின்னிங் அதாவது ஒரு மாதிரி ஆடையை அணிய விரும்புகிறார்கள்.

இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒருவரின் மகளின் திருமணத்திற்கு தாங்கள் வீட்டில் வளர்க்கும்  நாய்க்கு மெஹந்தி ஃபங்ஷன்  முதல் திருமணம் வரை துணிகளை தைத்துள்ளார்.

Stories

More

தஞ்சை அருகே சுற்றுலா தளமாக மாறி வரும் குப்பை கிடங்கு..! 

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

இந்த செல்லப்பிராணிகள் ஆடைகளின் நிறம் அவரது திருமண மணமகன் அல்லது மணமகள் ஆடைகளுடன் பொருந்துகிறது. திருமண கேக்கில் நாயின்  பெயரையும் எழுதியுள்ளார். செல்லப்பிராணிகளுக்கு ரூ.500 முதல் ஆடைகள் கிடைக்கின்றன.

”செல்லப்பிராணிகள் அல்ல எங்கள் குடும்ப உறுப்பினருக்கு நாங்கள் இதை செய்கிறோம்” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர் இதன் உரிமையாளர்கள்.