விழுப்புரம் மாவட்டத்தில் பனங்கிழங்கு விற்பனை ஜோர்.!

அந்தந்த பருவத்திற்கு ஏற்றார்போல பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பனைப் பொருட்களை பயன்படுத்தி தொழில் செய்து வருகிறார்கள்

பனை மரத்தில் இருந்து வரும் நுங்கு, பனை கிழங்கு, பனை ஓலை அனைத்திலும் ஏதாவது ஒரு உணவு பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அதிக அளவில் பனங்கிழங்கை தற்போது பயிரிட்டுள்ளனர்

பனங்கிழங்கு அதிக நார் சத்துக்களை உள்ளடக்கிய உணவும்கூட, தற்போது பனங்கிழங்கு பருவம் என்பதால் பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள் சென்று பனங்கிழங்கு வாங்கி வந்து

விழுப்புரத்தில் முக்கிய சாலையிலான காந்தி சிலை ஜங்ஷன் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில்  விற்பனை செய்து வருகின்றனர்

ஐந்து கிழங்கு அடங்கிய பனங்கிழங்கு ஒரு கட்டு 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்

கார்த்திகை, மார்கழி, தை போன்ற மாதங்களில் மட்டும் தான் இந்த பனங்கிழங்கு சாப்பிட கிடைக்கும் என்பதால்

Stories

More

குழந்தைகளுக்கு காலையில் காபி, டீ  கொடுப்பதை விட இதை கொடுங்கள்....!

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா?

தேன் வளர்ப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா.?

பொதுமக்கள் இதுபோன்ற பருவங்களில் கிடைக்கும் காய்கறிகள், கனிகளை நிச்சயமாக வாங்கி சாப்பிட வேண்டும் எனவும்

பனங்கிழங்கு அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்

ஒரு டன் செம்மரம் 2 கோடியா.? கோடிகளுக்கு அதிபதியாக உள்ள தஞ்சை விவசாயி.!