பக்தர்கள்‌ இன்றி சதுரகிரி மலையில் சிறப்பு பூஜை.!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்

இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு 2015 க்கு முன்பு வரை பக்தர்கள் தினசரி மலையேற அனுமதிக்கப்பட்டனர்

ஆனால் 2015 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் உயிர் சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து அமாவாசை பௌர்ணமி என மாதம் எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அன்று முதல் இன்று வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழைப்பொழிவு இருப்பின் மலையேற அனுமதி மறுக்கப்பட்டும் வந்தது,

அந்த வகையில் இந்தாண்டு மழைக்காலம் தொடங்கியது முதல் கனமழை காரணமாக சதுரகிரி மலையில் உள்ள நீரோடைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி மறுத்து வந்தது

இந்த நிலையில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு இந்த முறை மலையேற அனுமதி வழங்கப்படும் என பக்தர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மழை காரணமாக இந்த முறையும் அனுமதி மறுக்கப்பட்டது

Stories

More

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு இங்க இருந்து தான் தண்ணி வருதா

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா?

பாரதியார் பயின்ற வகுப்பறையின் சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா?

இதனால் பக்தர்கள் யாரும் இன்றி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கத்திற்கு அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது

எட்டாத உயரத்தில்… குகைகளுக்கு நடுவே அமைந்துள்ள அதிசய சிவன் கோவில்.. எங்க இருக்கு தெரியுமா.?