ஒரு மூட்டை நெல்  6000 ரூபாய் விலை போகிறதா.!

விழுப்புரம் மாவட்டத்தில் 11 வருடமாக பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் இயற்கை விவசாயி பாண்டியன் இலுப்பை பூ நெல் சாகுபடி முறை பற்றி பல விவரங்களை பகிர்ந்துள்ளார்

இலுப்பை பூ ரக நெல், கறுப்பு நிறத்திலும், அரிசி இளம் சிவப்பு நிறத்திலும் காணப்படும்.இந்த நெல்லை தமிழ்நாட்டில் விவசாயிகள் பரவலாக சாகுபடி செய்து வருகிறார்கள்

இந்த நெல் அரிசி சற்று நறுமணமாக காணப்படும். இந்த இலுப்பை பூ அரிசி சாப்பிடுவதால், உடம்புச் சூடு குறையும். நீரிழிவு நோய் குணமாகும், மற்றும் மூட்டு வலிகுணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது

இந்த ரக நெல்லை விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்தால், நிச்சயமாக நல்ல மகசூலை ஈட்டி, நல்ல லாபம் பார்க்கலாம்

இந்த ரக நெல்லுக்கு குறைந்த அளவு பராமரிப்பு போதுமனதாக இருக்கும். மேலும் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக நாற்றுகளை நட்டால் பயிர் நன்றாக வளரும் என பாண்டியன் கூறினார்

மேலும் இலுப்பை பூ சம்பா பயிரிடுவதற்கு முன்னர் மண்ணை முதலில் பசுந்தாள் உரம் போட்டு நன்றாக வளப்படுத்தி, 15 நாளில் நாற்றங்களை விட வேண்டும்

அதன் பிறகு, 20 முதல் 25 நாட்களுக்குள் நெற்பயிர்களில் களை எடுக்க வேண்டும். அடுத்த களை இருந்தால் எடுக்கலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம்

Stories

More

குழந்தைகளுக்கு காலையில் காபி, டீ  கொடுப்பதை விட இதை கொடுங்கள்....!

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா?

தேன் வளர்ப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா.?

இந்த நெல் அறுவடைக்கு தயாரான பிறகு, வயலுக்கு தண்ணீரை பாய்ச்ச வேண்டாம். நடவு நட்டு 120 முதல் 130 நாட்களில் அறுவடை செய்யலாம்

ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் 20 மூட்டை வரை அறுவடை செய்யலாம் எனவும், விவசாயிகள் பல தொழில்நுட்பங்களை நம்பிக்கை உடன் நெல் சாகுபடியில் பயன்படுத்தினால் நல்ல மகசூல் ஈட்டி நல்ல லாபம் பார்க்கலாம் என இயற்கை விவசாய பாண்டியன் தெரிவித்தார்

தினமும் ரூ.1000 வருமானம்… இயற்கை முறையில் வெண்டைக்காய் சாகுபடி செய்யும் விருதுநகர் விவசாயி.!