மதுரைக்கு ட்ரிப் வரீங்க அப்படின்னா கோவில், குளம், பார்க், மியூசியம் இந்த மாதிரி பிளேஸ்க்கு தான் போயிருப்பீங்க
ஆனா மதுரையில் இப்ப அடிக்கிற வெயிலுக்கு குழந்தைகளோட போயி நல்லா சில் பண்ணனும் அப்படின்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா நீங்க இந்த பிளேஸ்க்கு தான் போகணும்
மதுரையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழவந்தானில் உள்ள குருவித்துறை கிராமத்துக்கு உட்பட்ட சித்தாதிபுரம் என்ற ஊரில் தான் சித்தாதிபுரம் அருவி என்று சொல்லக்கூடிய அணைக்கட்டு உள்ளது
சித்தாதிபுரம் அருவி உள்ள இந்த அணுகட்டு பாக்க ரொம்பவே ரம்யமாக இருக்கும்
நாகமலை புதுக்கோட்டை மழைக்கு அடிவாரத்தில் தென்னை மரங்கள் எல்லாம் சூழ்ந்த பகுதியில் இந்த அணைக்கட்டு இருப்பதால் இது ஒரு குட்டி கேரள மாதிரியான பீலை நமக்கு கொடுக்கும்
இந்த அணைக்கட்டு படிக்கட்டு படிக்கட்டா உள்ளதால் ஒவ்வொரு படிக்கட்டிலும் தண்ணீர் போவதை பார்ப்பதற்கு ரொம்பவே ரம்மியமா இருக்கும்
அணைக்கட்டுக்குள்ள இறங்கிட்டோம்னா நல்லா என்ஜாய் பண்ணி குளிக்கலாம். தண்ணீரில் மரம், மலை இயற்கையை ரசிச்சுக்கிட்டே குளிக்கும் போது உண்மையாவே ஒரு குட்டி கேரள மாதிரியான ஃபீல் கொடுக்கும்
இந்த பிளேஸ் மதுரை மக்களோட டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாறிவிட்டு வருகிறது. அதனாலேயே சண்டே நாட்களில் இந்த பிளேஸ்ல ரொம்பவே கூட்டம் இருக்கும்
மழைக்காலங்கள் அதாவது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டா மட்டும் தான் இந்த அணைக்கட்டுக்கு தண்ணீர் வரும். மற்ற நாட்கள் எல்லாம் தண்ணீர் வராது
நீங்கள் கண்டிப்பா நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் சேர்ந்து இந்த இடத்திற்கு வந்தா நல்லாவே என்ஜாய் பண்ணலாம்