அரண்மனை தோற்றத்தில் காட்சியளிக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்.!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு என்று சுமார் 44 கோடி மதிப்பீட்டில் 66 ஏக்கர் பரப்பளவில் உலக வரலாற்றிலேயே ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டு வருகின்றது

வெளிப்புறத்தில் அரண்மனை போலவும் உட்புறத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் போலவும் வேற லெவலில் தயாராகி வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது

ஸ்டேடியத்தின் உட்புறத்தில் 4500 க்கும் மேற்பட்டோர் உட்காரக்கூடிய வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது

இதேபோன்று மைதானத்தில் காளைகள் சீறி பாய்ந்து வருவதற்கு வசதியாக வாடிவாசல் அமைக்கக்கூடிய பணிகளும் நடைபெறுகின்றது

குறிப்பாக வாடிவாசலில் காளைகளை அவிழ்த்து விடுவதற்கு என்று கம்பிகள் மூலமாக வரிசைகளும் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக காளைகள் வரிசையாக வந்து வாடி வாசலில் அவிழ்த்து விடப்படும்

அதேபோல் ஜல்லிக்கட்டு வீரர்கள் உடைமாற்றும் அறை, பொருள் வைப்பறை, விற்பனை கூடம், பத்திரிக்கையாளர் அறை பொருட்கள் பாதுகாப்பு அறை, காளைகள் பரிசோதனை அறை என்று பல்வேறு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தில் அரண்மனை தோற்றத்துடன் புல் தரைகள் மற்றும் செடிகள் அமைத்து பிரம்மாண்டமாக இந்த ஸ்டேடியம் காட்சியளிக்கிறது

Stories

More

ப்ரஷ்ஷான ஆத்து மீன் வேணுமா அப்ப இங்க போங்க ..!

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா?

அரண்மனையை விஞ்சிய வகையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்.!

அதேபோல் மைதானத்திற்கு வருவதற்காக சாலையை அகலப்படுத்தி தார் சாலைகள் அமைக்கக்கூடிய பணிகளும் நடைபெறுகிறது

தற்பொழுது வரை 98 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் டிசம்பர் மாதம் முடிவதற்குள் பணிகள் அனைத்தும் முடிந்து விடப்படும் என்றும் கூறப்படுகின்றது

மதுரை சோழவந்தானில் உள்ள சித்தாதிபுரம் அருவி பற்றி உங்களுக்கு தெரியுமா.?