அந்த மனசுதான் கடவுள்.. நடிகர் விஜய்க்காக விஜயகாந்த் செய்த அற்புத விஷயம்!

விஜயகாந்த் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய்.

அதன் பிறகு குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு என விஜயகாந்தின் அடுத்தடுத்தப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் விஜய்.

பின்னர் 1992-ல் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய்.

இதையடுத்து 1993-ல் தனது இரண்டாவது படமான செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார்.

தன்னுடைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜயின் இரண்டாவது படம் என்பதால் செந்தூரப்பாண்டியில் நடிக்க சம்பளமே வாங்கவில்லையாம் விஜயகாந்த்.

படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேறபைப் பெற்றதோடு 100 நாட்களைக் கடந்து ஓடியிருக்கிறது.

அதனாலோ என்னவோ விஜயகாந்த் மீது விஜய்க்கு எப்போதுமே தனிப்பட்ட மரியாதையும் அன்பும் உள்ளது.