பொங்கல் தொகுப்புடன் மண்பானை  வழங்கக்கோரும் மண்பாண்டத் தொழிலாளர்கள்.!

Scribbled Underline

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகை உழைப்பின் உயர்வை எடுத்து கூறும் திருநாளாக கொண்டாடப்படுகிறது

தமிழர்களின் பாரம்பரிய முறையான மண்பானையில் பொங்கலிட்டு வழிபாடு செய்வது ஆரோக்கியத்தை தரும் என்பதால், பல்வேறு மக்கள் இன்றும் மண்பாண்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்

நகர் பகுதிகளில் உலோக பொருட்களின் பயன்பாடு இருந்தாலும் பொங்கல் பண்டிகை அன்று மட்டும் மண்பாண்டங்களை பயன்படுத்தி வருகின்றனர்

இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகைக்கு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள சாலை அகரம் கிராமத்தில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும்

50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பண்டிகையை முன்னிட்டு மண்பானை தயார்செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ரூ.50 முதல் 300 ரூபாய் வரை மண்பானைகள் விற்பனைக்கு உள்ளது

மேலும், பொங்கல் தொகுப்பாக கரும்பு, அரிசி, வெல்லம் என அரசு வழங்குவது போன்று மண்பானையை மொத்தமாக கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில்,பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

காலநிலை மாறி மாறி வருவதால் சற்று சிரமமாக இருப்பதாகவும். இங்கு தயார் செய்யப்படும் பானைகள், உள்ளூர்களில் மட்டுமில்லாமல் சேலம்,கோயம்புத்தூர், சென்னை,பாண்டிச்சேரி போன்ற வெளி ஊர்களில் இருந்தும் ஆர்டர் எடுத்து பொங்கல் பானையை செய்துவருகிறோம்

சிறிய அளவு முதல் பெரிய அளவிலான பொங்கல் பானை செய்து வருகிறோம். அனைவருமே தமிழரின் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

குளிர்காலத்தில் அதிகரிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்...

குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகள்

கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா?

More Stories.

பழமையை மறந்ததால்தான் நாம் தேவையில்லாத நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். ஆகையினால், கண்டிப்பாக மண்பானையில் பொங்கலிட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறினார்

அதுமட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பாக வழங்கப்படும் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி பருப்பு, கரும்பு ஆகியவற்றுடன் மண்பானையும் வழங்கினால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும்” என மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது

அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பன்னீர் கரும்பு… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.!