நடிகர் ஜனகராஜா இது..? இப்ப எப்படி இருக்காரு தெரியுமா..? 

காமெடி நடிகர் ஜனகராஜின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் இணைந்து தனது நகைச்சுவையால் கலக்கியவர் நடிகர் ஜனகராஜ்.

தனக்கே உரிய பாணியில் பேசியும், சிரித்தும் மக்களை கவர்ந்தார்

அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 96. அந்த படத்தில் பள்ளிக் கூடத்தின் பாதுகாவலராக நடித்திருப்பார்.

அதன்பின் ஜனகராஜை நாம் சினிமாவில் பார்க்க முடிவதில்லை

இந்நிலையில், 68 வயதாகும் நடிகர் ஜனகராஜின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

அதில் அவர் சற்று உடல் மெலிந்து காணப்படுகிறார்