அகத்தியரை எப்போது வழிபடலாம்.? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.!

Scribbled Underline

திருநெல்வேலி மாவட்ட நெல்லையப்பர் கோயிலில் மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை அகத்தியர் சன்னதிக்கு செய்யப்படுகிறது

இந்த குரு பூஜையையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன

அப்படி அகத்தியர் சன்னதிக்கு என்ன விசேஷம் உள்ளது. அவரை எப்போது வழிபட வேண்டும், அப்படி வழிபட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என திருமுறைக்கலாநிதி வள்ளிநாயகம் விளக்கிக் கூறினார்

அப்போது அவர் கூறுகையில், நெல்லையப்பர் கோயிலில் மாதம்தோறும் ஆயில்யம் நட்சத்திரத்தின் போது அடியார்கள் பெருமக்களை பகவதி ராஜன் அழைத்து வந்து சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்

அகத்தியர் என்பவர் மேலான முனிவர். சிவபெருமானிடம் திருமண கட்சியை நான் காண வேண்டாமா என அகஸ்தியர் கேட்டார்

அதற்கு சிவபெருமான் அகத்தியரை தெற்கே பொதிகை மலைக்குச் செல், அங்கே அந்த காட்சி கிடைக்கும் என்றார். அதேபோன்று அங்கு அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கிறார்

முனிவர்களே உயரம் குறைந்தவர் அகத்தியர் முனிவர் தான். அவர் அருளிய 25 பதிகத்தை பாடிவழிபட வேண்டும்

அப்படி ஒருவர் மாதம் தோறும் ஆயில்ய நட்சத்திரத்தின் போது அகத்தியர் முனிவரை வழிபட்டால் நோயின்மை, நவகிரக நன்மை, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பிறப்புபாக்கியம் கிடைக்கும்

உறைப்பனிக்கு மத்தியில் கட்டப்படும் இக்லு மட்டும் கதகதப்பாக இருப்பது எப்படி?

ரத்தச் சிவப்பு நிறத்தில் மாறிய ஆறு...

இந்த ஸ்வீட்டையா இவ்வளவு நாள் விரும்பி சாப்பிட்டோம்... அதிர்ச்சி வீடியோ

More Stories.

அதேபோல் மன அமைதி, எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுதல், வழக்குகளில் வெற்றி, எம பயம் நீங்குதல், முக்தி நிலை பெறுதல் உள்ளிட்ட பயன்களை பெறலாம் என தெரிவித்தார்

பொம்மை, மண்பானை, மெழுகு ஸ்கிரீன் பிரின்டிங் ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி… மதுரையில் எங்கு தெரியுமா.?