உங்களுடைய கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா..? இதை உடனே பண்ணுங்க

உடனடி தேவைக்காக கடன் விண்ணப்பம் செலுத்திய நிலையில், உங்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டிருந்தால் அதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.

நாம் வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்யும்போது பல காரணங்களால் நம்முடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உண்டு

முந்தைய கடனை தாமதமாக திரும்பிச் செலுத்தியது, சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளது போன்றவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

பொதுவான காரணங்கள்

உங்களின் கடன் விண்ணப்பம் நிராகரிக்காமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

கிரெடிட் ஸ்கோர் சரியில்லாமல் இருப்பது, போதிய வருமானம் இல்லாமை, முந்தைய கடன் விவரங்கள், சிக்கலான வேலையில் இருப்பது அல்லது நீங்கள் அடைமானம் வைத்த சொத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பது போன்றவை கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக இருக்கலாம். இதையெல்லாம் முன்கூட்டியே சரிபார்த்து வைத்துகொள்ள வேண்டும்.

உங்கள் பான் எண் வேறொரு நபரின் கடனுடன் தவறுதலாக இணைக்கப்பட்டிருக்கலாம். அது கூட நிராகரிப்புக்கு காரணமாக அமையும். எனவே, அதைக் கண்டறிந்து சரி செய்யவும்.

நிலுவையில் உள்ள முந்தைய கடன்களை தக்க சமயத்தில் திருப்பிச் செலுத்திவிடவும். இதன் மூலம் உங்களின் கிரெடிட் ஸ்கோர் மீண்டும் நல்ல நிலைக்கு வரும்.

லோன் வாங்க போறீங்களா..?

மிகப்பெரிய தங்க இருப்பு கொண்ட 10 நாடுகள்

தினமும் ரூ.95 சேமித்து ரூ.13 லட்சம் வருமானம் பெறுவது எப்படி?

More Stories.

உங்களின் முந்தைய கடன்கள் உங்களின் வருமானத்தில் 30 முதல் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டதாக இருக்கக்கூடாது. அதிகபடியான வருமானம் கடனுக்கு செலுத்துவதை தவிர்க்கவும்.

முக்கியமாக உங்களின் ஆதார் எண், பான் எண், கையெழுத்து, முகவரி, பெயர் போன்ற ஆவணகளை சரிபார்த்துகொள்ளவும். இதனால் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.