கத்திரிக்காய் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஓர் எச்சரிக்கை... தோட்டகலைத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன.?

Scribbled Underline

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கத்தரிக்காய் அதிக அளவில் பயிர் செய்து சாகுபடி செய்து வருகின்றனர்

கத்திரிக்காய் பயிர் செய்வதற்கு தோட்டக்கலை துறை மூலம் பல அறிவுரைகள் வழங்கப்படுவதாகவும், அதேபோல் கத்திரிக்காய் சாகுபடி குறித்து தன்னுடைய அனுப்பவத்தையும் விளக்குகிறார் விவசாயி சக்திவேல்

விழுப்புரம் மாவட்டம் கல்லப்பட்டு கிராமத்தில் கடந்த 5 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். தன்னுடைய ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் செவந்தப்பட்டி என்ற ரக கத்திரிக்காய்களை சாகுபடி செய்து வருகிறேன்

இங்கு அறுவடை செய்யப்படும் கத்திரிக்காய்களை உள்ளூர் உழவர் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறேன் எனத் தெரிவித்த அவர் தன்னுடைய நிலப்பரப்பில் ஐந்தாவது முறையாக செவந்தம்பட்டி கத்திரிக்காய் பயிர் செய்துள்ளோம்

ஒவ்வொரு முறையும் கத்திரிக்காய்கள் நன்றாக வளர்ந்து நல்ல மகசூலை ஈட்டி தரும். இந்த முறை கத்திரிக்காய்களில் அதிக அளவில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது

இந்த நோய் தாக்குதல் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் நாங்கள் செடிகளை அப்படியே விட்டுவிட்டோம். அது அப்படியே செடிகள் முழுவதும் பரவி காணப்படுகிறது

இந்த நோய் தாக்குதல் பற்றி விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் கூறினோம்,. அவர்கள் உடனடியாக வயலுக்கு வருகை புரிந்தார்கள். பின்பு இந்த நோய் குறித்து பல அறிவுரைகளை வழங்கினார்கள்

பெண்ணின் காதுக்குள் நுழைந்து கூடு கட்டிய சிலந்தி..

குளிர்காலத்தில் நிறம் மாறும் விலங்குகள்..

அதிக மின்கட்டணம் வருகிறதா? பிரிட்ஜில் முதலில் இதை கவனியுங்க..!

More Stories.

மேலும் அதிகாரிகள் கூறுகையில், இந்த நோய் தண்டு துளைப்பான், வெள்ளை ஈ தாக்குதல் என கூறினார்கள். அதன் பிறகு இந்த நோய்களை கட்டுப்படுத்துவதற்கான  பல வழிமுறைகளை, அறிவுரைகளையும் கூறினார்கள்

அதாவது விளக்கு பொறி வைத்தல், வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்தல் போன்ற கரைசலையே பயன்படுத்த வேண்டும் எனவும், வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு சென்று கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள்

மேலும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை பின்பற்றிய பிறகு என்னுடைய வயல்களில் சற்று நோய் தாக்குதல் குறைந்துள்ளது எனவும் தற்போது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 கிலோ வரை கத்திரிக்காய்களை சாகுபடி செய்கிறேன் என விவசாயி சக்திவேல் கூறினார்

இயற்கை விவசாயத்தில் களமிறங்கிய 68 வயது மூதாட்டி.!