தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றுதான் பொங்கல் பண்டிகை.
விழுப்புரம் அருகே பிடாகம், மரகதபுரம், குச்சிப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரும்புகளை விவசாயிகள் பிரதான பயிராக தற்போது பயிரிட்டுள்ளனர்.
வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள பன்னீர் கரும்புகளை பொங்கல் பரிசு தொகுப்புக்கு கொடுப்பதற்காக அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்
அறுவடை செய்த கரும்புகளை, மினி லாரி, லாரி, ரேஷன் கடைகளுக்கும், மற்ற பகுதிக்கும் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழக அரசு பொங்கல் தொகுப்பு உடன் கரும்பு சேர்த்து தருகிறது. இதனால் கரும்பு வியாபாரிகளிடம் நல்ல விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.
ஒரு விவசாயிடமிருந்து குறைந்தபட்சம் 150 கட்டு பன்னீர் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு கரும்பு 20 ரூபாய் வீதம் ஒரு கட்டிற்கு 23 கரும்புகள் ஒரு கட்டில் அடங்குகிறது
மேலும் ஒரு சில உள்ளூர் வியாபாரிகள் நேரடியாக கரும்பு தோட்டத்திற்கு வந்து விவசாயிகளிடம் விலைபேசி கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்கின்றனர்.
தற்போது தமிழக அரசாங்கம் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்புகள் கொடுப்பதற்காக, விவசாயிகள் கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.