உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதை நமக்கு ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்
மூட்டுகளில் திடீரென தீவிர வலி ஏற்படும். குறிப்பாக கால் கட்டை விரலில் ஏற்படலாம். இவை யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதனால் ஏற்படும் கீழ்வாதத்தின் அறிகுறியாகும்
கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் இருக்கு அதிக யூரிக் அமிலத்தினால் அவை வீக்கம் ஏற்படும். மேலும் அழற்சியின் காரணமாக தோல் மென்மையாகவும் சிவந்தும் காணப்படும்
யூரிக் அமிலம் படிகங்களை ஏற்படுத்துவதனால் அவை சிறுநீரக கற்களை உருவாக்கும். இது அடிவயிறு அல்லது முதுகில் வலி ஏற்படுத்தும். சிறுநீரில் இரத்தம் கூட வர வாய்ப்புள்ளது
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் அவை உடல் சோர்வாக இருப்பது மட்டுமல்லாமல் உடல்நலக்குறைவும் ஏற்படும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்
சில நேரங்களில் உயர் ரத்த அழுத்தம் கூட யூரிக் அமிலம் உடலில் அதிகரித்திருப்பதை உணர்த்துவதற்கான அறிகுறியாகும்
சில நேரங்களில் பாதிக்கப்பட்ட மூட்டுகளின் மேலுள்ள தோல் பகுதி தொடுவதற்கு மிகவும் மென்மையாக மாறும்
கீழ்வாதத்தின் வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அழற்சியின் காரணமாக இரவில் தூக்கம் கெடும்
அதிக அளவில் யூரிக் ஆசிட் சுரக்கும் பொழுது மூட்டுகளில் விறைப்புத்தன்மை ஏற்பட்டு மூட்டுகளை நகர்த்துவதை கடினமாக்கும்