பொங்கலுக்கு அகப்பை தயாரித்து வரும்  110 வயது முதியவர்.!

Scribbled Underline

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் மழவராட்சி தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் ராமசாமி. இவருக்கு தற்போது 110 வயதாகிறது

இந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்காக அகப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்

மேலும் வெயில் காலம் தொடங்கும் ஒரு மாதத்திற்கு முன்னரே விசிறி மட்டைகளை செய்து திருவிழாவில் விற்பனை செய்வதையும் வழக்கமாக்கி வருகிறார்

பொங்கல் பண்டிகைக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அகப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தற்போது சுமார் 500-க்கும் மேற்பட்ட அகப்பைகளை தயாரித்து வருவதாகவும் ஒரு ஜோடி அகப்பை ரூ.40-க்கு விற்பனை செய்வதாகவும் முதியவர் தெரிவித்தார்

மேலும் இது குறித்து முதியவர் ராமசாமி கூறுகையில், எனக்கு 110 வயது ஆகிவிட்டது. இந்த வயதிலும் நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் அந்த காலத்தில் நான் சாப்பிட்ட உணவு தான் என நினைக்கிறேன். வரகு சாப்பாடு, கம்மங்கூழ், போன்ற உணவுகளை அப்போது அதிகமாக சாப்பிடுவோம்

இப்ப உள்ள உணவு முறைகள் எல்லாம் சரி இல்லை, எனக்கு குடிப்பழக்கம், புகைப்பழக்கம், புகையிலை வெற்றிலைப் பாக்கு, என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாக பொங்கலுக்கு அகப்பை செய்து வருகிறேன், விசிறி மட்டையும் செய்வேன்

வேப்பங்குச்சியில் தான் பல் துலக்குவேன், எனது அனைத்து பற்களும் வலுவாக தான் இருக்கிறது. பட்டாணிசாப்பிடுவேன். எந்த உணவையும் தவிர்க்க மாட்டேன் சைவம், அசைவம் என அனைத்தையும் உண்பேன்

இந்த தீவுக்கு வந்தால் வீடு, நிலம் இலவசம்...

ஜிம்மில் கெத்து காட்டிய 80 வயது பெண்மணி...

மனிதனின் எலும்பையே முறிச்சிடும்.. அபாயகரமான நாய்

More Stories.

சைவம் என்றால் கொஞ்சம் அதிகம் சாப்பிடுவேன். இன்னும் பத்து ஆண்டுகள் கூட நான் இருந்தால் அகப்பையை தொடர்ந்து செய்து வருவேன். இந்த அகப்பைகளை எனது மகன், மருமகள் தான் விற்பனை செய்வார்கள் என்று கூறினார்

ஒரு கிழங்கு மூன்று கிலோ வரை வளரும். சேனை கிழங்குகள் பெரும்பாலும் கேரளா போன்ற மாநிலங்களிலே அதிகம் விரும்பப்படுவதால் கேரளாவிற்கே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது\“என்று தெரிவித்தார்‌

சேனைகிழங்கு சாகுபடி செய்தால் லட்சத்தில் வருமானம் பார்க்கலாம்… விளக்கும் விவசாயி.!