விழுப்புரத்தில் அனுமன் ஜெயந்தி விழா மிக விமர்சையாக கொண்டாடிய பக்தர்கள்.!

Scribbled Underline

விழுப்புரம் திரு.வி.கா சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

ராம பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அனுமனின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது

இதையொட்டி மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று காலை அனுமன் ஜெயந்தி விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது

ஆஞ்சநேயர் எலுமிச்சம் மாலை மற்றும் பல்வேறு பூக்களாலும், தங்க காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர். அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன

அந்த அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்1 செய்து, நெய் விளக்குகளை ஏற்றி சுவாமியை வழிபட்டனர். மேலும் ஆஞ்சநேயர் நாமத்தை கூறி பக்தர்கள் வழிபட்டனர்

இந்த தீவுக்கு வந்தால் வீடு, நிலம் இலவசம்...

ஜிம்மில் கெத்து காட்டிய 80 வயது பெண்மணி...

மனிதனின் எலும்பையே முறிச்சிடும்.. அபாயகரமான நாய்

More Stories.

மேலும் அனுமன் ஜெயத்தை பற்றிய அர்ச்சகர் ராமமூர்த்தி கூறுகையில், அனுமனை வழிபட்டால் தைரியம், நல்ல புத்தி, எதையும் எதிர்க்கும் பலம், எந்த ஒரு செயலையும் பயமில்லாமல் செய்யும் தன்மை கிடைக்கும் என அர்ச்சகர் ராம்மூர்த்தி தெரிவித்தார்

பொங்கலுக்கு அகப்பை தயாரித்து வரும்  110 வயது முதியவர்.!