வெளிநாட்டவரை ஈர்க்கும் வாழை நார் கைவினைப் பொருட்கள்...  அசத்தும் தேனி பெண்கள்.!

Scribbled Underline

குள்ளப்புரம் கிராமத்தில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்தும் இல்லத்தரசிகளாக மட்டுமே இருக்கும் நிலையில் கிராமப்புற பெண்களை தொழில் முனைவராக்கும் நோக்கத்தோடு

களமிறங்கிய குள்ளபுரம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா தேவி கிராமபுற பெண்களை குழுவாக ஒருங்கிணைத்து அவர்களுக்கு தொழில் பயிற்சி கற்றுக்கொள்வதற்க்கு உதவியுள்ளார்

KVIC உடன் இணைந்து கிராமப்புற பெண்களுக்கு வாழை நாரிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி கற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்

அந்தப் பயிற்சியை கற்றுக் கொண்ட பெண்கள் முழு ஆர்வத்துடன் வாழைநாரியிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து வெளி சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்

இது குறித்து கிராம பெண்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், " தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடி அதிகமாக நடைபெற்று வரும் நிலையில், வாழை மரத்திலிருந்து வீணாகும் வாழை நாரிலிருந்து கைவினைப் பொருட்கள்

மற்றும் அலங்காரம் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி வகுப்புகள் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டது

பயிற்சியை கற்றுக் கொண்ட பெண்கள் வாழை நாரிலிருந்து 60 வகையான கைவினை பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்

இந்த தீவுக்கு வந்தால் வீடு, நிலம் இலவசம்...

ஜிம்மில் கெத்து காட்டிய 80 வயது பெண்மணி...

மனிதனின் எலும்பையே முறிச்சிடும்.. அபாயகரமான நாய்

More Stories.

150 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். நாளொன்றுக்கு பெண்கள் குழுவாக இணைந்து 10 முதல் 15 பொருட்களை தயார் செய்கின்றனர் எனவும் தெரிவித்தார்

வாழைநாறிலிருந்து தயாரிக்கப்பட்ட கூடைகள் அனைத்தும் பத்து ஆண்டுகள் வரை முழு தரத்துடன் இருக்கும் எனவும் கூறினார்

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்  8 எளிய பயிற்சிகள்.!