புதுச்சேரி மாநிலத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை வைத்துள்ளது. இது மட்டும் இல்லாமல் அவ்வப்போது கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளில் ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை போன்றவற்றை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது
இந்நிலையில் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் அண்ணா சாலை உழவர் சந்தையில், துணி பை ஏடிஎம் ஒன்றை நிறுவியுள்ளது
அதில் காய்கறி வாங்கும் பொதுமக்கள் பத்து ரூபாய் தாளை அந்த இயந்திரத்தில் செலுத்தினால் அதற்காக துணிப்பை ஒன்றை இயந்திரம் நமக்கு கொடுக்கும். பிளாஸ்டிக் இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும்,
ஏராளமான பொதுமக்கள் இந்த துணிப்பை இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். முதல் கட்டமாக உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள இந்த துணிப்பை இயந்திரம் மேலும் பல்வேறு இடங்களில் வைக்கவும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது