தைப்பூசத்தன்று  பழனியை போல் கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் ஏன்  இவ்வளவு கூட்டம்.!

Scribbled Underline

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்

இதில் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி, இளநீர் காவடி போன்றவற்றை பக்தி பரவசத்துடன் தாரை தப்பட்டைகள் முழங்க எடுத்துச் சென்று பாலசுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்

கபிலர்மலை மேல் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாக உள்ளது

குழந்தை வடிவில் இத்தளத்தில் அருள்பாலிக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி, ‘தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர் என்று போற்றப்படுகிறார்

கடல் மட்டத்தில் இருந்து 150 அடி உயரத்தில் கபிலர்மலையின் நடுவில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்ல 120 படிகள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன

கோவிலின் திருவிழா நாட்கள் ஐப்பசி சூரசம்ஹாரத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன

இவர்தான் உலகின் பணக்கார பிச்சைக்காரர்... சொத்து மதிப்பு எத்தனை கோடி?

R என்னும் எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்களின் குணநலன்கள் இவைதான்

திருடிய ஐபோனை திருப்பி கொடுக்க ‘டீல்’ பேசிய குரங்கு - வைரலாகும் வீடியோ

More Stories.

சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை, விசாக நட்சத்திர தினங்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்

பங்குனித் திருவிழாவில் நடைபெறும் தேரோட்டத்தில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது இந்த முருகன் கோவிலின் தனி சிறப்பு

மாதுளை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்.!