நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணியதில் ரூ.81.35 லட்சம் ரொக்க பணம் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் கோவில்களின் உண்டியல் காணிக்கை கோயில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது
இக்கோயில்களில் உள்ள 10 உண்டியல்கள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்
அந்த வகையில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று உண்டியல் காணிக்கையை எண்ணினர்
இதில் 81 லட்சத்து 35 ஆயிரத்து 606 ரூபாயும், 70 கிராம் தங்கமும் 276 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது
இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையர் இளையராஜா மேற்பார்வையில் நடைபெற்றது
இந்த காணிக்கை கடந்த காலங்களை விட அதிகம் என்றும், கடந்த டிசம்பர் மாதம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, அனுமன் ஜெயந்தி விழா, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை போன்ற
விழா நாட்களில் கோவிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருகை தந்த நிலையில் காணிக்கையும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்