விருதுநகர் மக்களின் 'பால்சோறு பக்கோடா' பற்றி தெரியுமா.?

உணவு என்பது ஓரிடத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை பொருத்து அமையும். அதை தான் கலாச்சார உணவு என்கிறோம்

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவு கலாச்சார உணவாக இருக்கும் போது விருதுநகருக்கு பால்சோறு கலாச்சார உணவு எனலாம்

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் பரோட்டா, சாத்தூர் கார சேவு, ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற உணவுப்பொருட்கள் எல்லாம் பிரபலமாக இருக்கும் போது பால்சோறு கலாச்சார உணவா என தோன்றலாம்

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதிகளில் வசிக்கும் மக்களின் இரவு நேர உணவாக பால்சோறும் பக்கோடாவும் தான் பெரும்பாலும் இருந்து வருகிறது

இரவு சாப்பாட்டை சூடாக சாப்பிட சாதத்தில் சூடான பால் ஊற்றி அதை பால் சோறாக மாற்றி அதற்கு சைடு டிஷ்ஷாக பக்கோடாவை வைத்து சாப்பிட்டு உள்ளனர்

இதே பழக்கம் தொடர்ந்து இன்றும் சில வீடுகளில் இரவு உணவாக பால்சோறு தான் உள்ளது. இன்றும் வேலைக்கு சென்று வீடு திரும்புவோர் கடைகளுக்கு சென்று பக்கோடா வாங்கி செல்கின்றனர்

விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி இந்த மூன்று ஊர்களும் வணிகர்கள் அதிகம் வாழும் பகுதி. இந்த வணிகர்களே அதிகம் பால் சோறு உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர்

1000 கார்கள் திருட்டு.. போலி நீதிபதியாக வாழ்க்கை.. யார் இவர்?

கல்யாண புடவை ரூ.17 கோடி.. நெக்லஸ் ரூ.25கோடி.. காஸ்ட்லி திருமணம்

விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா?

More Stories.

இன்றும் இங்கு நடக்கும் திருமண நிகழ்வுகளில் இரவு நேர விருந்தில் பால் சோறு தவறாமல் இடம் பிடிக்கிறது

பால் சோறு கலாச்சார உணவாக இருந்தாலும், மக்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக விருதுநகர் வெயில் அதிகமாக காணப்படும் வறண்ட பூமி

இந்த வறண்ட பகுதிகளில் வாழும் மக்களின் உடல் சூடு அதிகமாக தான் இருக்கும். அந்த வெப்பத்தை தணிப்பதில் இந்த பால் சோற்றுக்கு முக்கிய பங்கு உண்டு