கோவையில் கண்கவர் மலர்கள் கண்காட்சி... என்னென்னவெல்லாம் இடம் பெற்றது தெரியுமா.?

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி நடைபெற்றது.

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு விதமான மலர்கள் மற்றும் சிறுதானியங்களை கொண்டு செய்யப்பட்ட வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

இந்த மலர் கண்காட்சியில் பெரிய மலர் கூடையில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், சிறுதானியங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சதுரங்கம் பார்வையாளர்களை  கவர்ந்தன

மேலும் தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாள், சந்திரயான், இசை கருவிகளுக்கு இடையே SPB,

கேரட்டை உண்ணும் முயல், யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் பெள்ளி, ஆகியவை பார்வையாளர்களையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தன

மேலும் இந்த கண்காட்சியில் போன்சாய் செடிகள், வெளிநாட்டு செடிகள், மூலிகை செடிகள், வீட்டில் வளர்க்கப்படும் கண் கவர் மலர்கள்,

டென்னிஸ் ஆடுகளம், கிரிக்கெட் வீரர்களின் செல்பி ஸ்பாட், ஆகியவையும் இடம்பெற்று இருந்தன

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

இந்த கண்காட்சியை பார்க்க வந்திருந்த அனைவரும் பல்வேறு இடங்களில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்

மேலும் இந்த கண்காட்சியில் மலர் செடிகள் வளர்ப்பு மூலிகை செடிகள் வளர்ப்பு குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன