போட்டி போட்டு கழுகு மரம் ஏறிய இளைஞர்கள்... எங்கு தெரியுமா.?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பிரசித்தி பெற்றதாகும்

இக்கோயில் ஆண்டு தோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மாசிப் பெருந்திருவிழா சிறப்புற்றதாகும்

இந்த ஆண்டு திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி முக்கிய விழாவான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது

முன்னதாக அதிகாலை முதல் அலகு குத்தியும் அக்கினி சட்டி எடுத்தும், பறவைக் காவடி, பால்குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

பின்னர் காலையில் கோயில் முன் காந்தி நகர் பொதுமக்களால் கழுகு மரம் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காமராஜ் நகர் பொதுமக்களால் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

இதனைத்தொடர்ந்து கோயில் பூசாரிகள் பூக்குழி இறங்கியதை தொடர்ந்து பத்தர்கள் ஒருவர் பின் ஒருவராகவும், குழந்தைகளை தூக்கி கொண்டும் பூக்குழியில் இறங்கினர்

இதில் ஆயிரக்கணக்கான பத்தர்கள் பூக்குழி இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்