அப்படியே பழமை மாறாமல் புதுப்பொழிவுடன் காட்சி தர இருக்கும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை.!

மதுரையில் உள்ள சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தளங்களில் திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மஹால் மிகவும் சிறப்பு பெற்றது

பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மஹால் கம்பீரமான தூண்களை கொண்டு நிற்கின்றது

இந்த மஹாலில் உள்ள தூண்களையும் கட்டிடக்கலையையும் பார்ப்பதற்கு என்றே தினமும் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாபயனிகள் வந்து கொண்டே இருக்கின்றனர்

ஆனால் மஹாலின் சில பகுதிகளில் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே சுவர்களை பெயர்த்தும், தங்களது பெயர்களை எழுதி வைத்தும் செல்வதால் அரண்மனை பராமரிப்பு இன்றியே காணப்பட்டது

இந்த நிலையில் கடந்த ஆண்டு மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அரண்மனையின் தரைத்தளம், நாடக சாலை, பள்ளி அறை மற்றும் தூண்களை அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

அதாவது அரண்மனையின் உட்புறத்தில் உள்ள தரைத்தளம் முழுவதையும் பெயர்த்தெடுத்து அதில் தொல்லியல்துறை பரிந்துரைத்த கருங்கற்கள் பதிக்கப்பட்டும்,

மணல் சுண்ணாம்பு போன்ற பூச்சி பொருட்களை பயன்படுத்தி சுவர்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது

அதேபோல் அரண்மனையின் வெளி தோற்றத்திலும் முழுக்க முழுக்க பழமை மாறாமல் தற்பொழுது சுண்ணாம்பு பூசக்கூடிய பணிகளும் நடைபெற்று விரைவில் புதுப்பொழிவுடன் அனைவருக்கும் காட்சி தர இருக்கிறது