வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு... அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா செல்லலாமே.!

நெல்லையில் வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வந்தது

இதன் காரணமாக பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் காரையார் சொரிமுத்தையனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது

புலிகள் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்ததால், அகஸ்தியர் அருவி மற்றும் காரையார் சொரிமுத்தையனார் கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்

இதையடுத்து பாபநாசம் வன சோதனை சாவடி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வர ஆரம்பித்து விட்டனர்

அகஸ்தியர் அருவி மற்றும் காரையார் சொரிமுத்தையனார் கோயிலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்யப்பட்ட பின்னரே வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்

மது பாட்டில்கள் வைத்திருந்தவர்களிடம் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்