மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரி... எப்போது படகு சவாரி செய்யலாம்...

மதுரைக்கு அழகு சேர்க்கக்கூடிய இடங்களில் இந்த வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளமும் ஒன்று.

நாயக்கர் ஆட்சி காலத்தில் அரண்மனை கட்டுவதற்காக மண் தோண்டப்பட்ட இந்த இடத்தை மன்னர் திருமலை நாயக்கர் தெப்பக்குளமாக மாற்றினார் என்ற வரலாறும் உள்ளது

கிட்டத்தட்ட 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தெப்பக்குளம் தற்பொழுது மதுரை மக்களின் மினி பீச் என்றும் சொல்லப்பட்டு வருகிறது

இது மட்டுமின்றி கடந்த சில மாதங்களாகவே உணவு கடைகள் என்று பல்வேறு கடைகள் இருப்பதால் இப்பகுதி முழுக்க முழுக்க சுற்றுலாத்தலமாக மாறிக்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் மாநகராட்சி சார்பாக தெப்பக்குளத்தில் படகு சவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது.

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

காலை 11 மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் 18 பேர் அமரும் வகையில் படகு ஒன்று தெப்பக்குளத்தை சுற்றி, அதாவது நீராலி மண்டபத்தை ஒருமுறை சுற்றி வருகின்றது

இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு 20 ரூபாய் என்று வசூலிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் தற்பொழுது வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருப்பதினால் ஒரு சில நாட்களில் காலை 11:00 மணியிலிருந்து 6 மணி ஆகவும், ஒரு சில நாட்களில் 3 மணியிலிருந்து 6 மணி அளவு வரைக்கும் படகு சவாரிகள் நடத்தப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுபோக விடுமுறை நாட்கள் நெருங்கி கொண்டு இருப்பதாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதாலும் தெப்பக்குளத்திற்கு கூடுதலாக ஒரு படகும் விடப்படும் என்றும் கூறப்படுகின்றது