தென்காசியில் ஒற்றை காட்டுயானை அட்டகாசம்... பொதுமக்கள் அச்சம்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் மான், யானை, மிளா உள்ளிட்ட வனவிலங்குகளின் படையெடுப்பது என்பது வாடிக்கையாக இருந்து வருகிறது

தற்போது குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த அளவு இருந்து வருகிறது

இந்நிலையில் ஐந்தருவி தோட்டம் பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றிவருவதாக பொதுமக்கள் பார்த்துள்ளனர். மெயின் அருவியில் இருந்து ஐந்தருவி செல்லக்கூடிய வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை மரங்களை சாய்த்து வந்துள்ளது.

மேலும் சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களை ஓடித்து தின்பதற்காக அப்பகுதியில் சுற்றி வந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர்

இது தொடர்பாக வீடியோ வெளியாகி பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

வெயிலின் தாக்கம் காரணமாக காட்டு யானை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலரை ஒற்றை காட்டு யானை மிதித்து கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது