தேனியில் தொடங்கியது புத்தக திருவிழா... முழு விவரம் இதோ.!

தேனி மாவட்டத்தில் இரண்டாம் ஆண்டு புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்

தேனி மாவட்டத்தில் இரண்டாம் ஆண்டு புத்தக திருவிழா தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ளது

தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா தொடங்கி வைத்தார்

மூன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த புத்தக கண்காட்சி 10ஆம் தேதி வரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெற உள்ளது

சிறு குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சியில் 60 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

மேலும் இந்த புத்தக கண்காட்சியில் பட்டிமன்றம் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் சிறப்புரை ஆற்றுகின்றனர் மற்றும் கலைக்குழுவினர் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கூடுதலாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது

இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புத்தகத்தை வாங்கிச் செல்கின்றனர்