வெறும் 80 ரூபாயில் ராமேஸ்வரத்தை சுற்றி பார்க்கலாம்... முழுவிவரம் இதோ.!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு தினமும் வருகை தரும் சுற்றுலா பயணிகள் ராமநாதசுவாமி கோவிலை வழிபட்ட பின்பு ராமர்பாதம், தனுஷ்கோடி, அப்துல்கலாம் நினைவகம், பாம்பன் போன்ற பகுதிகளையும் சுற்றி பார்க்க செல்வார்கள்

இந்த இடங்களுக்கு செல்ல கார், வேன், சுற்றுலா வாகனங்கள் போன்றவற்றில் வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் சென்று விடுகின்றனர்

ஆனால் பேருந்து மற்றும் ரயில்களில் வருபவர்கள் ஆட்டோ, வேன் போன்றவற்றில் செல்வதற்கு அதிகமான செலவு ஏற்படுகிறது

இந்நிலையில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ரூ.80 கட்டணத்தில் ராமேஸ்வரம் நகர் பகுதியிலும் இருக்கக்கூடிய ராமர்பாதம், அக்னி தீர்த்தம், லெட்சுமணன் தீர்த்தம், ராமர் தீர்த்தம், ரயில்நிலையம், பேருந்து நிலையம்,

அப்துல் கலாம் இல்லம், அப்துல் கலாம் தேசிய நினைவகம் ஆகிய இடங்களை ஒன்றினைத்து முதற்கட்டமாக ஐந்து சிறப்பு சுற்று பேருந்தானது வாரத்திற்கு இரண்டு நாள் (சனி மற்றும் ஞாயிறு) இயக்கப்படுகிறது

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

இதில் ஒருமுறை ரூ.80 பயணக்கட்டணம் செலுத்தி பயண அட்டையை பெற்றுக்கொண்டு காலை 6 மணிமுதல் மாலை 8 மணிவரை அனைத்து சுற்று பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ள முடியும்

இந்த சுற்றுப்பேருந்து தொடக்கத்தால் நாடு முழுவதும் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்