சிவனின் பாதத்தில் அதிசயம்...  ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அற்புதம்.!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்ட மேலகிடாரம் சிவகாமி அம்பாள் - திருவனந்தீஸ்வரமுடையார் கோவில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சூரியபகவான் சிவனை வணங்கும் சூரியஒளி விழும் நிகழ்வு நடைபெறுவது வழக்கமாக உள்ளது

இந்நிலையில், சிவராத்திரியை முன்னிட்டு சிவா சகசர நாமஹோமம், சுப்பிரமணிய ஹோமம், ருணகர ஹோமம்,

கணபதி ஹோமம், லலிதா சஹஸ்ர நாமம் ஹோமம், தீப ஆராதனைகள் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரனைகள் இரவு முழுவதும் நடைபெற்றது

இதனை தொடர்ந்து, அதிகாலையில் சூரிய உதயத்தின் போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகாசிவராத்திரி தினத்தன்று சூரிய உதயம் திருவனந்த ஈஸ்வரமுடையார் சுவாமி பாதம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வானது நடைபெற்றது

இந்த நிகழ்வை கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, மேலகிடாரம், சிக்கல், சாயல்குடி ம ஆகிய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பக்தர்கள் நேரில் கண்டு சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்‌

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.