மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகாலின் தற்போதைய அப்டேட்...

மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மஹால் மதுரையில் உள்ள சுற்றுலா தளமாக சிறந்து விளங்குகின்றது

இங்குள்ள ஒவ்வொரு தூண்களும் அரண்மனையை தாங்கி பிடிக்க கூடிய வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது

இந்த மகாலை பார்க்க தினமும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் என நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்

இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மஹாலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது

இதனால் மஹாலில் உள்ள அருங்காட்சியகம் முழுவதும் தற்பொழுது தற்காலிகமாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வை இடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது

அதேபோல் அரண்மனையின் வலது புறத்தில் பணிகள் நடைபெற்று வருவதினால் இடப்புறம் மற்றும் மையப்புரத்தில் மட்டும் சுற்றிப் பார்ப்பதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது

குறிப்பாக அரண்மனையில் மாலை 6:00 மணி அளவில் நடைபெறும் ஒலி ஒளி காட்சிகளை பார்ப்பதற்கு என்று சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தருவார்கள்

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

ஆனால் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தினால் ஒலி ஒளி காட்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது

இவை அனைத்துமே பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரை செயல்படாது என்று திருமலை நாயக்கர் மஹால் அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது