Black Section Separator

2200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடம் கண்டுபிடிப்பு.!

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் பகுதியில் ஜம்புநதி ஆற்றங்கரையோரம் தட்டப்பாறை இடுகாடு உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளங்கள் தோண்டும் போது முதுமக்கள் தாழி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது

தொடர்ந்து அப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்தது. அதையொட்டி அங்கு கடந்த வாரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மாணவி ஒருவர் ஆய்வு மேற்கொண்டு 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமத்தாழிகளைக் கொண்ட ஈமக்காட்டை கண்டுபிடித்தார்

தொடா்ந்து ஆய்வு செய்த பேராசிரியர்களான முருகன் மற்றும்மதிவாணன் இந்த ஈமக்காட்டை ஒட்டி பண்டைய மக்களின் வாழ்விடம் இருக்கும் எனக் கணித்தனர்.

அதன் அடிப்படையில் இந்த இரண்டு பேராசிரியர்களுடன், தொல்லியல் பட்ட மேற்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களான பாலசண்முகசுந்தரம், முத்து அருள், இசக்கி செல்வம் ஆகியோருடன்தொல்லியல் துறைத் தலைவரான (பொறுப்பு) பேராசிரியர் சுதாகரும் களப்பணியில் ஈடுபட்டனர்

அப்போது இந்த இடுகாட்டிலிருந்துசுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்விடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

இந்த பகுதியின் மேற்பரப்பில் பழமையான உடைந்த கிண்ணங்கள், நொறுங்கிய பானைகள், உடைந்த நிலையில் கைப்பிடியுடன் கூடிய மூடிகள், வேலைப்பாடு உடைய பானை வகைகள், தாங்கிகள், தட்டுகள் மற்றும் சட்டிகள் நிறையச் சிதறிக்கிடக்கிறன

உடைந்த பானை ஓடுகளைக் கல்லை உரசிச் செய்த வட்டுகள் கண்டுபிடித்தனர். அதில் மிகச்சிறிய ஒரு தங்க வளையமும் அடங்கும். மேலும் இவர்கள் ஒரு தமிழ் எழுத்தைத் தாங்கிய பானை ஓடு ஒன்றையும் கண்டுபிடித்தனர்

இவற்றை எல்லாம் ஆய்வு செய்த தொல்லியல் பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணன் பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் செழித்து ஓங்கி விளங்கிய ஒரு சமூகம் இந்த பகுதியில் 2200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளனர் எனத் தெரிவித்தனர்