தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை...  ஏன் என்று தெரியுமா.?

தொழில் நகரமாக விளங்குகிய தனுஷ்கோடி 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட புயலின் காரணமாக இருந்த இடம் தெரியாமல் அழிந்தது

இதில் 1000-திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சுற்றுலா பயணிகள் புயலில் சிக்கி இறந்தனர்

தற்போது புயலில் மிஞ்சிய இடங்களினை தபால் நிலையம், விநாயகர் கோவில், தேவாலயம், ரயில் நிலையம் ஆகியவற்றினை காண தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்

இந்நிலையில், முகுந்தராயன் சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் வழக்கத்தினை விட கடல் ஆக்கிரோசத்துடன் காணப்பட்டு, 30 அடிக்கு மேல் கடல் அலைகள் தடுப்புகளை தாண்டி எழுவதால் தடுப்புகளை பெயரத்து கடல் நீர் சாலைகளில் விழுகிறது

தடுப்புகளில் உள்ள ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் கிடைப்பதால் வாகனங்கள் இயக்க முடியாது சூழல் உருவாகி வாகன ஓட்டிகள் திணறும் நிலை உருவாகி உள்ளது

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

மேலும், அங்குள்ள மீனவ குடியிருப்புகள் மற்றும் உணவக கடைகளுக்கு கடல் நீர் புகுந்ததால் மீனவர்கள் தவித்து வருகின்றனர்

இதனால் கடல் சீற்றம் குறைந்து சீரான நிலை உருவாகும் வரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுத்து தடை விதித்து உத்திர விட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்

இதனால் தனுஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர்