ஸ்டைலிஷ் லுக்... சமந்தாவின் பிளாக் ப்ளேசர் போட்டோஷூட் இணையத்தில் வைரல்.!

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகையாகி வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார்

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த சமந்தாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கியது. குறுகிய காலகட்டத்திலேயே பிரபல முன்னணி நடிகையானார் சமந்தா

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபல நடிகையானார் சமந்தா. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், 4 ஆண்டுகளுக்கு பின் கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்தனர்

அதன் பின் தனது நடிப்பில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வந்த சமந்தா தமிழ் தெலுங்கு மொழிகளை தாண்டி இந்தி மொழியும் கால்பதித்தார்

The Family Man வெப் சீரிஸில் நடித்த சமந்தாவுக்கு அந்த கதாபாத்திரம் நல்ல பெயரை எடுத்துதந்தது

புஷ்பா படத்தில் 'ஊ சொல்றேய மாமா' பாடலுக்கு சமந்தா ஆடிய கிளாமர் நடனம் ரசிகர்களை சமந்தா மோகத்தில் மூழ்கடித்தது என்றே கூறலாம்

இப்படி சமந்தாவின் கெரியர் கிராப் உச்சத்தை நோக்கி போய் கொண்டிருந்தது. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சிறிதுகாலம் உடல் நலத்தில் கவனம் செலுத்த நடிப்புக்கு பிரேக் எடுத்துள்ளார்

தற்போது பொழுது போக்கு நிகழ்ச்சிகள், ஒர்கவுட், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல், சுற்றுலா செல்வது என தனக்கான நேரத்தை கவனத்துடன் கழித்து வருகிறார

சமீப காலமாக பேஷன் ஐகானாக மாறியுள்ள சமந்தா சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளார். மேலும் தற்போது பிளாக் ப்ளேசருடன் அவர் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறத

next

தொப்பை கொழுப்பை குறைக்க 9 எளிய பயிற்சிகள்.!