ஆலய மணி போல ஓசை... இந்த அதிசய பாறை எங்கு இருக்கு தெரியுமா.?

தமிழகத்தின் தென்கோடிப் பகுதியான கன்னியாகுமரி ஏராளமான இயற்கை அழகை தன்னகத்தே கொண்டது

அதிகளவில் விவசாயம் நடைபெறும் இப்பகுதியானது அழகிய வனங்களைக் கொண்ட மலைகள், ஆறுகள், அருவிகள் என இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும்

மேலும், கன்னியாகுமரி பல புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களையும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் கொண்டுள்ளது

அப்படி கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிக தலமாக விளங்கும் பகுதி ஒன்று ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்கள் மட்டுமின்றி, வரலாற்றில் நாட்டமுள்ளவர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கிறது. அதுதான் தேவசகாயம் மவுண்ட்பகுதி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாடி மலை, தேவசகாயம் மவுண்ட் பகுதியில் அமைந்துள்ள இரட்டை தேவாலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற தேவாலயங்கள் ஆகும். இந்த தேவாலயங்கள் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை மற்றும் வியாகுல அன்னை திருத்தலங்கள் ஆகும்

இந்த தேவாலயங்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், கேரளம் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை புரிவது உண்டு

இந்த காற்றாடி மலைப்பகுதிக்கு அங்குள்ள தேவாலயங்கள் மட்டுமின்றி, அந்த மலைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதுவே இங்கு ஆன்மிக நாட்டமுள்ளவர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகைதர காரணமாக உள்ளது

இந்தக் காற்றாடி மலைப்பகுதியில் மலைகளுக்கு நடுவே மணி அடிச்சான் பாறை என்ற பாறை பகுதி உண்டு

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

இந்தப் பாறையில் கல்,  இரும்பு போன்ற பொருட்களைக் கொண்டு தட்டும் பொழுது அது மணி அடிப்பது போல வித்தியாசமான சத்தம் எழுப்புகிறது

இதற்குக் காரணம் இந்த மணிஅடிச்சான் பாறையானது மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது பாறை வெடித்து உருவானதாகக் கூறப்படுகிறது

இந்நிலையில் தற்போது பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆரல்வாய்மொழி காற்றாடி மலைப்பகுதிக்கு வருகை புரிந்து மணிஅடிச்சான் பாறையைப் பார்த்துச் செல்கின்றனர்

இந்த கோடைக்காலத்தில் நீங்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரி செல்லத் திட்டமிட்டால் இந்த மணிஅடிச்சான்பாறைக்கு சென்று வரலாற்று அனுபவத்தையும்,  ஆன்மிக உணர்வையும் ஒருசேரப் பெறுங்கள்