சம்மர் ஸ்டார்ட் ஆகிடுச்சு... பூம்புகார் நகரம் சுற்றுலா போலாமா மக்களே.!

பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றுதான் இந்த பூம்பூகார். இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது

காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந்நகரம், காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது

அந்தவகையில் பூம்புகார் நகரம் இன்றும் ஒரு வரலாற்று தலமாக முக்கியத்துவம் பெற்று வீற்றிருக்கிறது. மிகத்தொன்மையான மண் சிற்பங்கள் மற்றும் தாழிகள் பூம்புகார் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன

தமிழ்நாட்டின் ஆதி நாகரிக நகரங்களில் ஒன்றாக இந்த பூம்புகார் நகரம் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது

சுற்றுலா பயணிகள் மயிலாடுதுறை சந்திப்பு அல்லது பூம்புகார் சாலை வழியாக வரம் சுற்றுலா பயணிகள் சீர்காழியில் இறங்க வேண்டும்

பூம்புகார் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சாலையில் இணைக்கப்பட்டுள்ளது. பூம்புகார் முதல் மயிலாடுதுறை வரை 24 கி.மீ., மற்றும் சீர்காழி 21 கி.மீ தொலைவில் உள்ளது

தனியார் விமான நிறுவனங்களால் சென்னை-பூம்புகார் பயணிகள் திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் மற்றும் சீர்காழி வழியாக பூம்புகார் செல்லலாம்

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், திருப்பத்தூர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், காரைக்கால், தரங்கம்பாடி மற்றும் ஆக்கூர் வழியாக செல்லலாம். அவர்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை வழியாகவும் வரலாம்

தமிழ்நாட்டின் எல்லா நகரங்களையும் போன்றே கடற்கரை ஓரத்தில் வீற்றிருக்கும் பூம்புகார் நகரமும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் சூழலை கொண்டுள்ளது

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான பருவத்தில் இந்த நகருக்கு சுற்றுலா மேற்கொள்வது உகந்ததாக இருக்கும். சுற்றுலாதலமாகவும், வணிகத்திற்கும் உகந்த பூம்பூகார் நகரை நாமும் சென்று பார்த்து ரசிப்போம்