அடிக்கடி உள்வாங்கி காணப்படும் ராமநாதபுர கடற்கரை... மீனவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்.!

மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே தெற்குவாடி மற்றும் முள்ளிமுந்தல் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்

இப்பகுதியில் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது கடல் உள்வாங்குவதும் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக ஒன்றாக உள்ளது

இந்நிலையில், அதிகாலை இருந்து கடல் நீர் 200 மீட்டர் தூரம் வரையிலும் உள்வாங்கி காணப்பட்டது

கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் அனைத்தும் தரைதட்டி நின்றது. கடலில் இருக்கும் சங்குகள் நத்தைகள் அனைத்தும் கரை ஓரங்களில் ஊர்ந்து காணப்பட்டன

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

இது கோடைகாலத்தில் காலநிலை மாற்றம் மற்றும் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அவ்வப்போது நிகழும் நிகழ்வு

நண்பகல் நேரத்திற்கு பிறகு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்