தேனி வீரபாண்டி திருவிழா... எப்போது தெரியுமா.?

தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில். இக்கோவில் திருவிழா உலக புகழ் பெற்றதாகும்

இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 7 நாட்கள் வரை இரவும் பகலாகவும், மிக சிறப்பாக நடைபெறும்

இந்த கோவிலுக்கு பக்தர்கள் காவடி, அக்னி சட்டி, பூ மிதித்தல் போன்ற வழிகளில் அம்மனுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம்

தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான திருக்கம்பம் நடுதல் விழா தற்போது நடைபெற்றது

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படும்

திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளாவில் இருந்து பக்தர்கள் வருகை தருவர். திருவிழா நாளில் தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் திரள்வார்கள்

இந்தாண்டு கோயில் திருவிழாவிற்கான திருக்கம்பம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அம்பாள் கோயில் வீட்டில் இருந்து கரகத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

கண்ணீஸ்வர முடையார் கோயில் ஆற்றங்கரையில் இருந்து திருக்கம்பம் கோயிலில் நடுதல் விழா நடைபெற்றதை தொடர்ந்து தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்

மே7 ல் திருவாபரணப்பெட்டி கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு வரும் நிகழ்வுடன் திருவிழா துவங்குகிறது. மே 10ல் தேர் வடம்பிடித்தல் நடக்கிறது

மே 13ல் தேர் நிலைக்கு வருகிறது. மே 14ல் ஊர் பொங்கலுடன் திருவிழா நிறைவடைகிறது. வீரபாண்டி சித்திரை திருவிழா துவங்க உள்ளதால் தேனி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்