கோடையில் நுங்கு சாப்பிடுவதன் அவசியம் என்ன மற்றும் அதன் மருத்துவ குணங்கள்.!

பொதுவாக அந்தந்த சீசனில் கிடைக்கும் இயற்கையான உணவுப் பொருட்களை தவறாமல் உண்ணுவதன் மூலம் உடல் நிலை சீராக இருக்கும் என்று சொல்வார்கள்

அந்த வகையில் உடலை மிக முக்கியமாக கவனிக்க கூடிய காலம் இந்த கோடை காலமே. மனித உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு உஷ்ணமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது

நம் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைப்பதற்கு வெயில் காலங்களில் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் நுங்கு, இளநீர், கரும்புச்சாறு மோர் உள்ளிட்ட பொருட்களை உண்டு வருகிறோம்

மற்ற சீசன்களில் இளநீர், கரும்புச்சாறு, உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தாலும் வெயில் காலத்தில் மட்டுமே அரிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு பொருள் நுங்கு

வெயில் காலம் வந்து விட்டதா? கவலைப்படாதே உன்னை காப்பாற்ற நான் வந்து விட்டேன் என்று இயற்கை உணவு மூலம் மனிதனுக்கு சொல்லும் ஓர் உயிர் நண்பன். உடலின் உஷ்ணத்தைப் போக்குவதற்கு மட்டுமல்லாமல் பல நன்மைகளை நுங்கு கொண்டுள்ளது

நுங்கு சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து உடல் சோர்வும், மயக்கமும் நீங்கும். வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னை, மலச்சிக்கல், உடல் சோர்வு , தோல் நோய்கள், கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு, ஆற்றல் குறைவு போன்ற பிரச்னைகளையும் இந்த நுங்கு சுளைகளை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்‌

முக்கியமாக வெயில் காலத்தில் வரும் அம்மை நோய்களை நுங்கு தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள நுங்கு உதவுகிறது. அதேபோல் கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிடுவது மிக நல்லது. செரிமான பிரச்சனை மலச்சிக்கல், படபடப்பு ஏற்படுவதை நுங்கு தடுக்கிறது

நுங்கு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நேரடியாக சுத்தமான நீர் சத்துக்கள் சேர்ந்து வயிறு மட்டும் அல்லாமல் உடலையே திருப்தி அடைய செய்வதை அடுத்து பசியைத் தூண்டும். அதோடு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க நுங்கு உதவுகிறது

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

வெயில் காலத்தில் எவ்வளவு நீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை தேவையான அளவு நுங்கு சுளையைச் சாப்பிட்டு பாருங்கள்‌‌. தாகம் அடங்கும். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்

நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. நுங்கு சாப்பிட்டு வருவதன் மூலம் தோல் நோய்கள் நீங்குவதுடன் சரும பாதுகாப்பும் ஏற்படும்

அதோடு கூந்தலையும் ஆரோக்கியமா வைத்துக்கொள்ள உதவுகிறது. குடல் புண், வயிற்றுப்போக்கு, கோடை காலத்தில் வரும் கொப்பளம் வியர்க்குரு அனைத்தையும் நுங்கு விரட்டி அடிக்கிறது

இதோடு உடலுக்கு ஏற்ற பல நன்மைகளையும் தரும் நுங்கினை மேல் தோலினை நீக்காமலும் அப்படியே சாப்பிடுவதும் நன்மை‌தான்

நுங்கில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஹைப்பர் கிளைசிமிக் எஃபக்ட்னால (Anti-hyperglycemic effect) ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. அதனால், சர்க்கரை நோய் இருக்கக்கூடிய நபர்கள் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து 4 நுங்கை சாப்பிடலாம்