வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிகள்.!

தமிழகத்தில் கோடை வெயில் வெப்பநிலை கடந்த ஆண்டைவிட அதிகரித்து கடுமையான வெயில் தாக்கம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 44 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடித்து வருகிறது

இதனால் பொதுமக்கள் நண்பகலில் வெயிலில் செல்ல முடியாமல் அச்சம் அடைந்து வீட்டிலேயே முடங்கி வருவதால் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சில வழிமுறைகளை கூறியுள்ளது

காலை 11 மணியில் இருந்து மாலை 4:00 மணிவரை அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்

தாகம் இல்லாதபோதும், உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தாகம் எடுக்காவிட்டாலும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

குழந்தைகளை காரில் உள்ளே தனியாக விட்டு செல்லாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்

வெளிப்புறங்களில் காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை வேலை செய்வதை தவிர்த்திட வேண்டும்

விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் திட்டமிட்டு தங்களுடைய பணிகளை செய்தல் வேண்டும்

ஏசி கேஸ் கசிவு ஏன் நடக்கிறது? முன்பே தடுப்பதற்கான கைட்லைன்ஸ்...

வெயில் பற்றி கவலையில்லை... வந்தாச்சு பாக்கெட் ஏசி புதிய வெர்ஷன்!

ஃப்ரிட்ஜை ஏசியாக மாற்றி பயன்படுத்த முடியுமா..?

More Stories.

துரித உணவு வகைகள் மற்றும் காரமான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்

வெளியே செல்லும் போது கருப்பு கண்ணாடிகள் மற்றும் சன்ஸ்கிரீன் லோசன் பயன்படுத்தவும்

நண்பகல் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்

next

கன்னியாகுமரியில் ஒரு நாளில் சுற்றிப்பார்க்க டாப் 5 சூப்பர் இடங்கள்.!